பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வெண்கலச்செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவினைச் சேர்ந்த நான்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மெழுகுதிரி உற்பத்திக்கான ரூபா 99,450.00 பெறுமதியான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.