புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்பாணத்தின் பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2019 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்றது.

நாவற்குழி மகாவித்தியாலயத்திலும் டிறிபேர்க் கல்லூரியிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷில்பக் அம்புலே அவர்களாலும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களாலும் மாணவர்களிடம் கையளிக்கட்டது.