புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 09 ஜனவரி 2019 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வட மாகாண ஆளுநரை வரவேற்றார்.

சமயத் தலைவர்கள், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,   முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனோல்ட், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், பாதுகாப்பு படை அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,  அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.