பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான மகளிருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

 

பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான 3 நாள் தொடர் விழிப்புணர்வுக் கருத்தரங்கானது கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டத்தில் கடந்த 19.10.2022 தொடக்கம் 21.10.2022 வரை நடைபெற்றது.

கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து நடாத்திய இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் இலைக்கஞ்சி, சிறுதானியக்கஞ்சி, சுக்குமல்லிகோப்பி, துருஞ்சிமணப்பாகு, தூதுவளை அடை, நன்னாரிப்பானம், செவ்வரத்தம்பூ பானம், கறுவாத்தேநீர் மற்றும் கற்றாளைப்பானம் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் பற்றிய செயன்முறை விளக்கங்கள் சமூக மருத்துவ உத்தியோகத்தரால் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கானது பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்டது.

இதில் ஏறத்தாழ 25 பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.