நீர் வெறுப்புநோய் என்பது கொடிய உயிர் கொல்லிநோய் ஆகும். இது நாய்,பூனை மற்றும் காட்டுவிலங்குகளான குரங்கு, நரி, வெளவால், கீரி, ஓநாய் போன்ற விலங்குகளினால் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலான நோய் தொற்றுநாய் கடிப்பதனாலேயே ஏற்படுகின்றது.
இந்தநோயின் தாக்கம் கட்டாக்காலிதெருநாய்கள் அதிகளவில் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றது. நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர் சிகிச்சை பெறுவது பயனளிக்காது உயிரிழப்புநிச்சயம் ஆதலால் வரமுன்னே காப்பது சிறந்தது.
நாய்கடி அல்லது உமிழ்நீர் தொற்றுக்குள்ளானோர், நகக்;கீறல்கள் உடையோர் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்தது. இந்தநோயின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இந்நோயை எமதுநாட்டில் இருந்து முற்றாக அகற்றுவதற்காகவும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் வடமாகாணம் பின்வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் 6 மாதநிறைவின் பின்னர் இனப் பெருக்கசத்திரசிகிச்சையை இலவசமாக மேற்கொள்வதற்கு தங்கள் பகுதிக்குரிய கால் நடைவைத்தியரைஅணுகலாம். மேலும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிபோடுதல் தொடர்பானவிபரம் பின்வருமாறு .தாய்க்குதடுப்பூசி வழங்கப்படவல்லையாயின்,இயன்றளவில் இளம் வயதில் முதலாவது தடுப்பூசியும், பின்னர் வருடந்தோறும் வழங்கப்படவேண்டும். தாய் நாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பின்; குட்டிக்கு வயது 3 மாதங்கள்ஆகும் போது முதலாவது தடுப்பூசி வழங்கப்படவேண்டும். பின்னர் வருடந்தோறும் தடுப்பூசி வழங்கப்படல் வேண்டும்.
இவற்றில் மிகமுக்கியமான நடவடிக்கைகளாக வளர்ப்புநாய்கள் மற்றும் தெருநாய்களுக்கு இலவச விசர்நாய் தடுப்பூசி ஏற்றல், நாய்களின் பெருக்கத்தை குறைப்பதற்கு இலவச கருத்தடை சத்திரசிகிச்சை,செய்தல் பாடசாலைமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீர் வெறுப்புநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி சேவைகளை தவறாது பெற்று குடும்பஉறுப்பினர்களையும்,செல்லப் பிராணிகளையம் நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பணிப்பாளர்
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
வடக்கு மாகாண சபை