நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம்

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை வவுனியா பொதுச்சந்தை முன்றலில் 01.03.2024 தொடக்கம் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இக் கருத்துருவானது CABI என அழைக்கப்படும் “Center for Agriculture & Bio Science International ” நிறுவனத்தினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக சில தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது வெற்றியளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் பயிர்ச்சிகிச்சை முகாமாகவும், நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாகவும் முன்னெடுக்கப்பட்டுவந்தது.

ஆனாலும் 2020 இல் ஏற்பட்ட COVID- 19 பெருந்தொற்றின் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வருகைதரும்போது பயிர்ச்செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ளும் முகமாக கள உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்து தீர்வுகளை வழங்கிவருகின்றனர். குறிப்பாக பயிர்ப் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டுவருகின்றது.

மேலும் உடனடித் தீர்வு வழங்கப்படமுடியாதவிடத்து பின்னாளில் அவர்களிடம் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படுகின்றது.

இச் சேவையினை மாவட்டத்திலுள்ள விவசாயிகளும் பிற மாவட்டங்களிலிருந்து வருகைதருகின்ற விவசாயிகளும் பெற்றுக் கொள்ளலாம்.