வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (09.07.2025) நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவையைக் கையளித்த தவிசாளர், திண்மக் கழிவகற்றல் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.