தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களாக பங்குபற்றியிருந்தனர்.

தேசிய மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது நாடுதழுவிய மாணவர் பாராளுமன்ற வேலைத்திட்டம் தொடர்பான “பிபிதுனு சிசு மெதி சபய” நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது