அரசாங்கத்தின் சௌபாக்கியா இலகு கடன் திட்டத்திற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட எட்டு பலநோக்கு சங்கங்களுக்குரிய கடன் வழங்கும் திட்டம் 13 பெப்பிரவரி 2021 அன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள்இ வரலாற்றில் முதற்தடவையாக பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு நெற்கொள்வனவு செய்வதற்காக பெரியளவு தொகை மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் நெற்கொள்வனவில் ஈடுபட்டமை மிகக் குறைவு.
மேலும்இ வடமாகாணத்தில் அமைக்கப்பட்ட 15 ற்கு மேற்பட்ட அரிசி ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஆலைகள் கூட தற்போது இயங்கவில்லை என்பதை கௌரவ வர்த்தக அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த போதுஇ உடனடியாக பதிலளித்த கௌரவ வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள்இ குறித்த அரிசி ஆலைகளை நேரில்சென்று பார்வையிட்டு உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
கூட்டுறவுத்துறை மேலும் வளர்ச்சியடைய வேண்டும்இ அதன் மூலமாக மக்கள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி மற்றும் வர்த்தக அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு துறைக்காக 20 மில்லியன் ரூபா கடன் வழங்கல் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே “இவ்விலகுக் கடனை பெற்று குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யவேண்டும். இதுவே இத்திட்டத்தின் முக்கியமான நோக்காகும்” எனவும் தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சர் மற்றும் இராஜங்க அமைச்சர் அவர்கள் தெரிவித்த வியாபார உத்திகளை கையாண்டு ஸ்தம்பிதமடைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் சிறந்தவொரு நிலையை அடையவேண்டும்இ மற்றும் விலை குறைக்கப்பட்ட 28 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் 3 மாதத்திற்குள் சதோசா மற்றும் கோப்சிற்றி அமைப்புக்கள் மூலம் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விற்பனை செய்யவேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொண்டார். அத்துடன் நியாயமான கட்டுப்பாட்டு விலையில் தரமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தனஇ கூட்டுறவு சங்கங்கள்இ சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவர்ணஇ அமைச்சின் மேலதிக செயலாளர்இ வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்இ தேசிய கூட்டுறவுச்சபை தலைவர்இ கூட்டுறவு கிராம சங்கங்களின் தலைவர்கள்இ மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிபர்கள் மற்றும் காவற்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.