மேற்படி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ் வட மராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றுகின்ற உயர்ந்த குறிக்கோளுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினதும் மற்றும் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினதும் வழிகாட்டலின் பேரில் வட மராட்சி கரவெட்டி முள்ளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறை சேதனப் பசளை தயாரிப்பு நிலையமானது 27யூன் 2021 அன்று மதியம் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராயபக்ச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி. எஸ் . எம் . சார்ல்ஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாரளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று புதிதாக திறந்து வைக்கப்பட்ட பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், தையிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோக திட்டத்திற்கான கட்டடத் தொகுதியை திறந்து வைத்ததுடன் மரக்கன்றினையும் நாட்டி வைத்தார்.
மேலும், யாழ்ஃமத்திய கல்லூரியினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் யாழ் கலாச்சார மத்திய நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.