சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 26.08.2025 அன்று காலை 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் திரு.ஜெ.பிரதீப் தலைமையிலும், அம்பாள்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 04.09.2025 அன்று 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் செ.செல்வநொயிலின் தலைமையிலும் நடைபெற்றன.

இந் நிகழ்வுகளிற்கு பிரதம விருந்தினராக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. சோ.விஜயதாசன் கலந்து சிறப்பித்திருந்தார். பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தினர்.

உண்மை விதை மூலமான வெங்காய உற்பத்தி, தூவல் நீர்ப்பாசனத்தின் கீழான வெங்காய செய்கை உயர் பாத்திகளில் வெங்காயச் செய்கை போன்ற மேம்படுத்தப்பட்ட பயிர்ச் செய்கையினை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.