சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

சார்க் குழுமத்தின் பிரதிநிதிகள் 06.01.2023 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கௌரவ ஆளுநரின் வழிகாட்டலுக்கமைய சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர்.

அங்கு நெசவுத் தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் அந்நிலையத்தில் வேலை செய்யும் பெண் நெசவுத் தொழிலாளர்களுடனும் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப் பணிப்பாளருடனும் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மேலும் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை பார்வையிட்டதுடன் தமது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் சுமார் ரூபா36,000.00  பெறுமதிக்கு மேற்படி உற்பத்திப் பொருட்களில் சிலவற்றை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து தங்களின் ஆதரவை அந்நெசவாளர்களுக்கு வழங்கியிருந்தனர். அத்துடன் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப்பணிப்பாளர் நினைவுப் பரிசாக கைத்தறியில் செய்யப்பட்ட பொருட்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.