‘அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள்,சமத்துவம்.வலுப்படுத்துகை.’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2025.03.07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகம் தலைமை நிர்வாக அதிகாரி செல்வி.சி.எஸ்.ரம்யா அவர்கள்;; கலந்து சிறப்பித்திருந்தார். பெண் தொழில் முயற்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நலன்விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வுக்கு பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர்.
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமாக மகளிர் விவகார அமைச்சும் தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து விழா நடைபெற்ற மண்டப வளாகத்தில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சிக் கூடங்களை அமைத்துக் கொடுத்து 2025.03.07 மற்றும் 2025.03.08 ஆகிய இரு தினங்களும் காலை தொடக்கம் மாலை வரை விற்பனைச் செயற்பாடுகள் செவ்வனே நடைபெற உதவிகள் புரிந்தன.
மகளிர் தின நிகழ்வின் முதல் கட்டமாக விருந்தினர்களை வரவேற்று பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் கண்காட்சிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வும், தமிழ்ப் பண்பாட்டினை பிரதிபலிக்கும் முகமாக வரவேற்பு நடன நிகழ்வானது நர்த்தன ஷேத்திரா நடனப்பள்ளிக் குழுவினராலும் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள்’அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள், சமத்துவம். வலுப்படுத்துகை’ எனும் கருப்பொருளை சுருக்கமாக விளக்கி தலைமையுரையை ஆற்றினார். ‘பிள்ளைகளின் உருவாக்கம் ஒரு சவாலா?அல்லது கற்றல் அனுபவமா?’என்ற கருப்பொருளில் வைத்திய கலாநிதி திருமதி.சுரனுதா அன்ரன் சுதாகரன் அவர்கள் பல நிதர்சனங்களை ஆதாரéர்வமாக முன்வைத்து ஆற்றிய சிறப்புரையினை தொடர்ந்து ‘சகல தரப்பினரையும் உள்வாங்கக் கூடிய முறைமை மாற்றத்தின் ஊடாக வடமாகாண பெண்களின் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல்’என்ற கருப்பொருளில் பேராசிரியர் திருமதி. சிவானி சண்முகதாஸ் அவர்கள் சிறப்புரையினையும் ஆற்றியிருந்தனர்.
சிறப்புரைகளை தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரையினை இந்தியத் துணைத்தூதரக தலைமை நிர்வாக அதிகாரி செல்வி சி. எஸ். ரம்யா அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் இனிதே ஆற்றியிருந்தனர்.
தொடர்ந்து வடக்கு மாகாணத்திற்கான பால்நிலைக் கொள்கையானது சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் (ஐடுழு) அனுசரணையுடன் ஐகெழவுநஉhஐனுநுயுளு Pஏவு டுவுனு நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு அது தொடர்பான விளக்கக் காட்சிப்படுத்தலுடன் ஐடுழு நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் திரு. தோமஸ் கிறிங், பால்நிலை உத்தியோகத்தர் ஐடா சுகன்யா அவர்களும்; வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களும் இணைந்து வடமாகாண கௌரவ ஆளுநருக்கு கையளித்திருந்தனர்.
இந்; நிகழ்வினைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் செயற்படும் குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் மகளிர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, மாவட்ட மட்டங்களில் காலாண்டிற்கு ஒரு முறை நடைபெறும் ஊராட்சி முற்றக் கூட்டங்களில் தீர்மானிக்கப்படாத பிரச்சனைகள் மாகாண மட்டத்தில் உயர்மட்ட தீர்மானம் எடுத்தலுக்காகவும் மற்றும் கொள்கை ர{தியான தீர்மானங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தேவைப்படும் விடயங்களை பிரதம செயலாளர் தலைமையில் தீர்வினை எட்டும் பொருட்டும் அதற்கான முன்வைப்பொன்றினை பிரதம செயலாளரிடம் கையளிப்பதற்கேதுவாக பிரதம செயலாளர் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.
தொடர்ந்து அரங்கினை மெருகூட்டும் நிகழ்வாக ‘விரலிசை கானங்கள்’ எனும் இசை நிகழ்வானது ஸ்ரீமதி கவிதா வாமதேவன் அவர்களது நெறியாள்கையுடன் இனிதே அரங்கேற அதன் தொடர்ச்சியாக மாகாண ரீதியாக திறந்த நாடகப்போட்டியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம், நீர்வேலி செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் ‘மனச்சிறை’ எனும் நாடகமானது பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் போன்ற விடயங்களை உள்ளடக்கி தமது நாடகஆற்றுகையினை சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
மேலும் தொடர்ச்சியாக பல்துறை பெண் சாதனையாளர் (நிகரி விருது) மற்றும் பெண்சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது இடம்பெற்று அவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வின் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஓவியப்;போட்டி,கட்டுரைப் போட்டியில் மாகாண ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு தொடர்ந்து எமது அமைச்சினால் நடாத்தப்பட்ட வீதியோர நாடகப் போட்டியில் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கும் சான்றிதழ்களும், கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
கௌரவிப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து அரங்கினை மிளிர வைக்கும் முகமாக குழு நடனமானது ‘அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு சிவகலை நாட்டியாலயா குழுவினரால் உஷாகரன் விஜிதவாணி அவர்களது நெறியாள்கையுடன் இனிதே நடைபெற்றது.
‘மகளிர் மகுடம்’ எனும் கடன் திட்டத்தின் மூலம், மகளிருக்கான புதிய சுயதொழில் முயற்சி மற்றும் சுயதொழில் விரிவாக்கத்திற்கான கடனானது இம் வருடமும் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும்; ரூபா ஒரு மில்லியன் வீதம் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக சிறந்து விளங்கும் பெண்கள் கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் மற்றும் சிறந்த பெண்கள் கூட்டுறவு அபிவிருத்தி சங்கங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இறுதி நிகழ்வாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி. ராஐமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.