சர்வதேச சிறுவர் தினவிழா 2024

இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு சிறுவர்தினவிழாவானது மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் 05.10.2024 அன்று இலங்கை வேந்தன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினம் ‘சிறுவர்களை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’ எனும் தொனிப் பொருளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

மாகாணமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மங்கல விளகோற்றலை அடுத்து சிறுவர்களின் மும்மதப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுனர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களும் விருந்தினர்களாக திரு திருவாகரன், செயலாளர், மாகாணப் பொதுசேவை வ.மா அவர்களும், திருமதி சாந்தசீலன் சிரேஷட உதவிச் செயலாளர், சுகாதார அமைச்சு, வ.மா அவர்களும், திரு தி. விஸ்வரூபன் – மேலதி பணிப்பாளர் நாயகம், அரசிறைக் கொள்கைகள் திணைக்களம், நிதி அமைச்சு அவர்களும் மற்றும் திருமதி உமா தங்கவேல் மேலதி மாகாணப் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்), மாகாணப் கல்விப் திணைக்களம், வமா. அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்
இந் நிகழ்வில், விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன. அத்துடன் வடமாகணத்தில் செயற்பட்டுவருகின்ற 36 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் சிறுவர்களுக்கிடையில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் மற்றும் கேடயங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன, மேலும் சென்ற ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைபெற்ற சிறுவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன, மற்றும் தேசிய மட்ட மற்றும் சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும் சான்றிதழ்களும் மற்றும் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன, மேலும் மாகாணரீதியில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது இதில் 06 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு அதிசிறப்பு விருதும், 06 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு சிறப்பு விருதும் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில், ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறுவர்களின் சிறப்பு கலைநிகழ்வு நடைபெற்றன.