கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக Chrysalis அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் வடமாகாண கைத்தறி நெசவு காட்சியகம் இல.505, பருத்தித்துறை வீதி நல்லூர் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில திறப்பு விழா வைபவம் ஆரம்பமானது.

இவ் நிகழ்விற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்; நிகழ்விற்கு செயலாளர், பேரவை செயலகம் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி.அஞ்சலி சாந்தசீலன் அவர்களுடன், மாகாண நீரப்;பாசன பணிப்பாளர் திரு.வீ.பிறேமகுமார், மகளிர் விவகார அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. எஸ்.விஸ்ணுகுமார், நீர்ப்பாசன திணைக்கள யாழ் மாவட்டப்பிரிவு பொறியியலாளர் திரு.எஸ்.சர்வராஐh அவர்களும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இவ் கைத்தறி நெசவு காட்சியகத்தில் வடமாகாண நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கைத்தறி நெசவாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் சாறி, படுக்கைவிரிப்புக்கள், துவாய்கள், தலையணை உறைகள், வேட்டிகள், சாறம், மேசை விரிப்புக்கள், கைத்தறி புடவைகள் மற்றும் பல உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.