கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 05 ஆகஸ்ட் 2019 அன்று மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
111 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட 40 கடைத் தொகுதிகளை கொண்டிருக்கும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது நான்கு கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் அவர்கள், பாவனையற்ற நிலையிலுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு