யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலவச சித்த வைத்தியசாலைகளில் கடமைபுரியும் ஒரு தொகுதி மருந்துக்கலவையாளருக்குகான பயிற்சி நெறியானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் உள்ளூராட்சித்திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது.
இப்பயிற்சி நெறியானது மருந்துக்கலவையாளர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடாத்தப்பட்டது.
28/11/2022 ஆரம்பித்த இப்பயிற்சி நெறியானது 6/12/2022 வரை 7 நாட்கள் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில்; உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி, சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பு மருத்துவ உத்தியோகத்தர், கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலை – மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.