மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 24.05.2023 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்பாடுகள், சபை வீதிகள், சபை வருமானங்கள், சோலைவரி அறவீடுகள் மற்றும் நிலுவைகள், மன்றங்களின் செயலாற்றுகை மதிப்பீடு, கழிவு முகாமைத்துவம், சத்துணவு வழங்கல், டெங்கு ஒழிப்பு, சிறுவர் பூங்கா பராமரிப்பு, பொது மலசல கூடங்களைப் பராமரித்தல், ஆளணி ,இடமாற்றங்கள் மற்றும் வெற்றிடங்கள், முல்லைத்தீவு பஸ்தரிப்பு நிலையம், வீதி விளக்குகளுக்கான கட்டணம், சபைக் கொடுப்பனவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதுடன் அது தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.