நிகழ்வானது 25.07.2024 அன்று மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் “வளம் தரும் வாசனை பயிரை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
1/4 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வைபவ ரீதியான கறுவாச்செடி நடுகை, அதன் பதப்படுத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்கள், பயிற்செய்கை முகாமைத்துவம் தொடர்பான தெளிவு படுத்தல்கள் மற்றும் கருவாவிலிருந்து சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பு படிமுறை தொடர்பான விளக்கங்கள் போன்றவை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திரு.ச.சிறிபாஸ்கரன் திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம் கிளிநொச்சி, திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் மாகாண விவசாய பணிப்பாளர் வடமாகாணம், திரு.ச.அரவிந்தன் திட்ட அலுவலர் DEV Pro, திரு.பாபு பணிப்பாளர் CSIAP, திரு.சத்தியநாதன் கிராம சேவகர் சிவிக்சென்ரர், திரு.சிவமோகன் இரணைமடு கமக்கார அமைப்பு தலைவர், திரு.ம.றஜிதன் விரிவுரையாளர் விவசாயக் கல்லூரி பரந்தன், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் (வட்டக்கச்சி மத்திய கல்லூரி, இராமநாதபுரம் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு GTMS), பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையை உத்தியோகத்தர்கள் இரணைமடு, சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் வட்டக்கச்சி, விவசாயக் கல்லூரி உத்தியோகத்தர்கள் பரந்தன், நெல் ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள் பரந்தன், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள்,மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.