இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (28.09.2025) நடைபெற்ற ‘யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025’ இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர்.
உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.









