யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.
