வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் விசேட ஊடக அறிக்கை
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றில் நான் பங்குபற்றியது தொடர்பான எனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்மை ஆழ்ந்த வருத்தத்திற்குரியதும் துரதிஸ்டவசமானதுமாகும். விசேடமாக ஆங்கில ஊடகங்கள், என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்டமைக்கு மொழியாக்கம் அல்லது வேறு விடயங்கள் காரணமாக அமைந்திருக்கலாம்.
எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் இடம்பெற்றன. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார் முன்மாதிரயான இராஜதந்திர ஒழுங்கையும் திறன்களையும் வெளிப்படுத்தியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். எங்கள் கலந்துரையாடல்கள் முழுமையான ஒத்துழைப்புடனும் நல்லெண்ணத்துடனும் இடம்பெற்றன.
இலங்கையில் போருக்குப் பின்னர் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் மீண்டும் கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம்.
உண்மைதான் நமது வேறுபாடுகளையும் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றை எவ்வாறு ஒன்றாக சமாளிப்பது என நாம் விவாதித்தோம். இருந்தும் எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் இடம்பெற்றன.
ஏதாவது தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தால் அல்லது விளங்கிக்கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகின்றேன். பாசெல்ட் அம்மையார் அவர்கள் முன்மாதிரியான இராஜதந்திர ஒழுங்கையும் திறன்களையும் வெளிப்படுத்தியவர். அவரை நான் மிகவும் மதிக்கின்றேன்.