இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களது கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பயிற்சித்திட்டமானது 2022.11.26(சனிக்கிழமை), 2022.11.27(ஞாயிற்றுக்கிழமை) ஆம் திகதிகளில் முறையே வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. வவுனியா, மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் மயிலூரான் மண்டபத்திலும் காலை 9.00மணி தொடக்கம் பி.ப 3.00மணி வரை இப்பயிற்சித்திட்டமானது நடத்தப்பட்டது.
26.11.2022 சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சித்திட்டமானது இறைவணக்கத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.அறிவழகன் லெனின் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால் யோகாசனப் பயிற்சியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக சைவசித்தாந்தம், இந்துக்கற்கைகள் பீட தற்காலிக உதவி விரிவுரையாளர் சிவஸ்ரீ.குமாரசுவாமிநாதசர்மா அவர்களினால் தத்துவமும்,நடைமுறைகளும் பற்றி விரிவுரையாற்றப்பட்டது. தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடம், இந்து ,இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி பற்றி கற்றுக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மதிய உணவு இடைவேளையின் பின்னர் யாழ் தொழில்நுட்பக்கல்லூரி வருகைதரு விரிவுரையாளர்(ஆங்கிலம்) திரு.சி.விக்னேஸ்வரன் அவர்களால் பண்ணிசை பயிற்றுவித்தல் பற்றி போதிக்கப்பட்டது. பயிற்சிப்பட்டறை நிறைவில் பயிற்சி பற்றிய பின்னூட்டல் எடுக்கப்பட்டது. பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வவுனியா பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.கவிராஜ் அபிராமி அவர்களின் நன்றியுரையுடன் ,ப்பயிற்சித்திட்டமானது இனிதே நிறைவுபெற்றது.
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் மயிலூரான் மண்டபத்தில் நடைபெற்ற அறநெறி ஆசிரியர்களுக்கான பயிற்சித்திட்டமானது இறைவணக்கத்துடன், யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணாளினி விஜயரத்தினம் அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால் யோகாசனப் பயிற்சியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து யாழ்பல்கலைக்கழக ஓய்வுநிலை சிரேஷ்ட போதனாசிரியர்(ஆங்கிலம்) திரு.சி.விநாயகமூர்த்தி அவர்களினால் திருமுறைகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து யாழ்பல்கலைக்கழக சைவசித்தாந்தம், இந்து கற்கைகள் பீடம், சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.திருச்செல்வம் செல்வமனோகரன் அவர்களினால் தத்துவமும்,நடைமுறைகளும் பற்றி விரிவுரையாற்றப்பட்டது. தொடர்ச்சியாக மதிய உணவு இடைவேளையினைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களினால் மனப்பாங்கும் மகிழ்வூட்டலும் பற்றி கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு.குமரேஷன் பாலஷண்முகன் அவர்களால் பண்ணிசை பயிற்றுவித்தல் பற்றி போதிக்கப்பட்டது. பின்னர் பயிற்சிப்பட்டறை பற்றிய பின்னூட்டல் எடுக்கப்பட்டு பங்குபற்றிய அறநெறி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.பு.மணிசேகரம் அவர்களின் நன்றியுரையுடன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித்திட்டமானது நிறைவுபெற்றது.