டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்கள் பணத்தை வைப்பிலிட்டு அதன் ஆவணத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தார்.
பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் சகோதரன் சு.கணேதாஸ் அவர்களால் ஒரு மில்லியன் ரூபா மேற்படி நிதியத்துக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை ஆளுநரிடம் கையளித்த நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு அது உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


