அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வானது 18.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.15 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் – 1 இல் நடைபெற்றது.

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கைகளின் அடிப்படையில் உயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ள தேசிய நிறுவனங்களை அங்கீகரிக்கும் முகமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமர் அவர்களும் மற்றும் கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதி சபாநாயகர் மற்றும் கௌரவ எதிர்க்கட்சித்தலைவர் அவர்களும் பிரதமரின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அந்த வகையில் வடமாகாணத்துக்கென பதின்மூன்று (13) திணைக்களங்கள் தெரிவு செய்யப்பட்டு இருபத்திரண்டு (22) விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அவற்றில் 2019 ஆம் ஆண்டுக்காக ஆறு (06) தங்க விருதுகளையும் நான்கு (04) வெள்ளி விருதுகளையும் சுவீகரித்துக் கொண்டன. 2020 ஆம் ஆண்டுக்காக எட்டு (08) தங்க விருதுகளையும், நான்கு (04) வெள்ளி விருதுகளையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் காணப்படும் நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.