வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபைக்கு தலைவராக திரு.எஸ்.அமிர்தலிங்கம் அவர்கள் 10 பெப்ரவரி 2020 முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் 10 பெப்ரவரி 2020 அன்று ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.