வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனமான தீராத நோய்களினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Free Slots to Play Online - Top Free Slot Machines

மேற்குறித்த 25 வீட்டுத்திட்ட பயனாளிகள் அனைவரும், தமது வீட்டினை பௌதீக ரீதியாக ஆரம்பித்துள்ளதுடன் 20 பயனாளிகள், கூரை வேலைகளை முடிவுறுத்தியதோடு ஏனைய பயனாளிகள் தொடர்ச்சியாக, பௌதீக கட்டுமானங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அனைத்து பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இதுவரை ரூபா 11.85 மில்லியன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.