வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு

தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கிய நிலைபேறான விவசாயம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வானது 26.07.2023 அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இவ் வயல் விழா நிகழ்வில் விவசாயம் சார்ந்த நவீன பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பங்கள், சிறந்த விவசாய நடைமுறைகள், தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், சேதன விவசாயத் தொழில்நுட்பங்கள், சேதனப் பசளைகள் மற்றும் பீடை நாசினிகளின் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன கலந்து சிறப்பித்திருந்ததுடன் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மாவட்டச் செயலாளர் திரு. சரத் சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாஸன் ஜெகூ மற்றும் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், விவசாயிகள், விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.