மாவட்ட மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் 31.05.2019 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இக் கௌரவிப்பு நிகழ்வானது உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது.
இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம் – 2018 இன் கீழ் நடாத்தப்பட்ட சிறந்த விவசாயிகள் தெரிவிற்கான மாகாண மட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற வெற்றியாளர் ஒருவர் கௌரவிக்கப்பட்டார். இப் போட்டியில் சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர் வகுதியின் கீழ் பாரதிபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் பிரியதர்சினி என்பவர் வட மாகாணத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் ஏழாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா 10,000.00 பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்களும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த அன்னாசிச் செய்கையாளர், மற்றும் உயர் செறிவான முறையில் மாமரச் செய்கையில் சிறப்பாக ஈடுபடுபவர் என 04 தலைப்புக்களின் கீழ் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட 12 வெற்றியாளர்களிற்கும் வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். பணப்பரிசாக முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் முறையே ரூபா 15,000.00, ரூபா 12,500.00, ரூபா 10,000.00 எனும் அடிப்படையில் காசோலைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் 120 வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வோர் தலைப்புக்களின் கீழும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ் வருமாறு