உருத்திரபுரநாயகி உடனுறை உருத்திரபுரீசுவரர் ஆலயம் – கிளிநொச்சி.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு 2024.03.08ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00மணிக்கு உருத்திரபுரீச்சுரர் ஆலய முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
மாலை 6.00மணிக்கு முதலாம் சாமப்பூசையுடன் ஆரம்பமாகிய விரத நிகழ்வில் முதலாம் சாமப் பூசை பண்பாட்டலுவல்கள் அலகிற்குரிய பூசையாக ஒழுங்கு செய்யப்பட்டது. இப்பூசையில் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர், பிரதி அதிபர், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர், கிளிநொச்சி தெற்கு கல்வி வலய கணக்காளர், கிளிநொச்சி தெற்கு வலய உத்தியோகத்தர்கள் மற்றும் பண்பாட்டலுவல்கள் அலகின் சிரே~;ட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இரவு 8.00மணிக்கு முதலாம் பூசை வழிபாடுகள் நிறைவுற்று ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வடமாகாண சிவராத்திரி நிகழ்வுகள்; ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜக்குருக்கள் அவர்களது ஆசியுரையுடனும் ஆலய பரிபாலன சபை தலைவரது வரவேற்புரையுடனும் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேடையில் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அறிமுகஉரை வழங்கப்பட்டிருந்ததுடன் மேடை நிகழ்வுகளை பண்பாட்டலுவல்கள் அலகின் ஒழுங்கமைப்புக் குழுவினர் தொகுத்து வழங்கினர். கிளிநொச்சி சிவகலை நாட்டியாலயா மாணவிகளது வரவேற்பு நடனம், இரணைமடு செஞ்சோலை வளாக மாணவிகளது சிவதாண்டவ நடனம், ஜெயபுரம் பரமசெல்வ நர்த்தனாலய மாணவிகளது காவடி, பாம்பு நடனம், கலாசார உத்தியோகத்தர் திரு.சி.முகுந்தனது ஆன்மீகச் சொற்பொழிவு, இணுவில் இளந்தொண்டர் சபை கலைஞர்களது பக்த நந்தனார் இசைநாடகம் ஆகிய கலைநிகழ்வுகள் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. கலைநிகழ்வுகளை வழங்கிய கலைஞர்களுக்கு பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழாவில் 2000இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விரதத்திற்கான வழிபாட்டினை மேற்கொண்டு நிகழ்வினை கண்டுகளித்ததுடன் பக்தி பூர்வமாக பக்தர்களின் மனங்களில் இடம்பெற்று இவ்விழாவானது இனிதே நிறைவுபெற்றது.