வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல்

தொழிற்றுறைத் திணைக்களத்திற்கு சிறு கைத்தொழில் போதனாசிரியர்கள் ஆறு பேருக்கும் ஒரு விற்பனை முகாமையாளர் பதவிக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களினால் 2019.05.15 ஆம் திகதி (புதன்கிழமை) பிரதம செயலாளர் செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருமதி. ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திரு. இ.பத்மநாதன், பிரதிப் பிரதம செயளாலர் – நிதி, திரு.ப.காண்டீபன், கணக்காளர், தொழிற்றுறைத் திணைக்களம், வடக்கு மாகாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.