வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 26 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் பொலிஸ் சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும்  குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் வடமாகாணத்தில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Johnny Zs Sportsbook Review : Closed