வடமாகாண ஆளுநர் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனாதன் அலஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த 25 செப்ரெம்பர் 2023 அன்று கொழும்பில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தங்கள் ஆர்வத்தை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் வடக்கிற்கான அபிவிருத்தியில் தமது ஆதரவைத் தொடர உறுதியளித்தனர்.