வடக்கு வட்டமேசை’ (‘Northern_Province_Round_Table’) கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 19 செப்ரெம்பர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இம்முறை இடம்பெறவுள்ள வட்ட மேசை கலந்துரையாடலில் ‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கமுடியும்.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு