வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் ‘வடக்கு வட்டமேசை’ (”Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் 03 ஒக்ரோபர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்லும்வகையில் கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்‘ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பிலான கருத்துக்களை தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்கமுடியும்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

30 Better Bets Casino Bonus & Promo Codes More You Should Know