வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

வடக்கு மாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 06.09.223 ஆம் திகதி புதன்கிழமை யாழ் மருதானார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அணியினை எதிர்த்து வடக்கு மாகாண உள்ளுராட்சி அணி மோதியது. இதில் வடமாகாணக் கல்வி அமைச்சு அணி வெற்றிபெற்றது.
கரப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அணியினை எதிர்த்து வடக்கு மாகாண பிரதம செயலாளார் அணி மோதியது. இதில் வடமாகாண கல்வி அமைச்சு அணி வெற்றிபெற்றது.
போட்டியின் இறுதி நிகழ்வான கயிறு இழுத்தல் போட்டியில் பெண்கள் அணிகளான வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அணியினை எதிர்த்து வடக்கு மாகாண பிரதம செயலாளார் அணி மோதி கல்வி அமைச்சின் பெண்கள் அணி வெற்றிபெற்றது. ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் வடக்கு மாகாண பிரதம செயலாளார் அணி எதிர் சுகாதார அமைச்சு அணி பங்குபற்றியது. இப்போட்டியில் பிரதம செயலாளர் அணி வெற்றியீட்டியது.