யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்மாவட்டத்தில் துடுப்பாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் , யாழில் ஓர் கிரிக்கட் அக்கடமியை ஸ்தாபிப்பதுடன் கிரிக்கட் விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , ஆளுநர் அவர்களிடம் இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வடமாகாணத்தின் விளையாட்டுத்திணைக்களத்தின் கீழ் கடினப்பந்தை இணைத்துக்கொண்டு வட மாகாண சபையின் ஊடாக இதற்கான அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு உதவுமாறும்; யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்;. இது தொடர்பாக ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் , வடமாகாண விளையாட்டுத்துறைக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.