யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் 

திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தைடனும் கட்டி எழுப்பவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்அவர்கள் தெரிவித்தார் .

அரச புகைப்பட ஆலோசனைக்குழு , வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சு ,இலங்கைக்கலைக் கழகம் , கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சியை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் 20 செப்ரெம்பர் 2019 அன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் 2016, 2017 ,2018 வருடங்களில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுடனும் கௌரவ ஆளுநர் அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

OVO Casino Review NZ 2023