“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முன் மொழியப்பட்டுள்ள “முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேடகலந்துரையாடல் ஆளுநரின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு அனுரதிஸாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (22) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந்த திட்டத்தினை ஆரம்பிக்கும்போதும் அதற்கு முன்னருமான காலப்பகுதியில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள்திணைக்களம், சுற்றாடல்பாதுகாப்புஅதிகாரசபை,வனவளபாதுகாப்பு திணைக்களம் மற்றும் இத்திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இதன்போது ஆராயப்பட்டது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு