மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்

🏆 Best New Michigan Online Casinos 2024 💫 New Site Reviews - Pokerlistings

முல்லைத்தீவு மாவட்ட முதலாவதும் மற்றும் இறுதியுமான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான மஸ்தான், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர் , வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வடமாகாண திணைக்கள தலைவர்கள், முல்லைத்தீவு உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலர்கள், காவற்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மாவட்ட அரச அதிபரினால் சமர்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக இவ்வாண்டில் நடைபெறும் முதலாவது கூட்டம் இதுவாகும். மேன்மை தங்கிய கௌரவ ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் திட்டத்திற்கு அமைய இந்த நாட்டிலே உள்ள அனைத்து வித மக்களும் எந்தவிதமான சமூக இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சுபீட்சத்தை நோக்கி கொண்டுசெல்லப்பட வேண்டும் எனும் நோக்கில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்தினார்.

மேலும், அபிவிருத்தியும் சுப்பீட்சமும் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், மக்களுக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பதே எமது மேன்மை தங்கிய கௌரவ ஜனாதிபதி மற்றும் எமது நோக்கமும் ஆகும். மேலும் வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் மூலம் தெரியவந்த விடயங்கள் பற்றி கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு துறைகளிலே வளங்கள் அனைத்தும் நகரங்களுக்குள்ளேயே குவிக்கப்பட்டும், கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டும் உள்ள நிலைமையை கண்ணூடாக கண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

மேலும், 2௦21 ம் ஆண்டு அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் “கிராமங்களை நோக்கிய அபிவிருத்தி” எனும் கௌரவ ஜனாதிபதியின் நோக்கத்திற்கு இணங்க கிராம மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் கூறினார். கல்வி மற்றும் சுகாதார துறைகளில் உள்ள ஆளணிப் பிரச்சனை வெகு விரைவாக தீர்க்கப்படும் எனவும், சுகாதார துறையில் உள்ள ஆளணி பற்றாக்குறையை நீக்குவதற்காக சுகாதார துறையின் அமைச்சர் கௌரவ பவித்திரா வன்னியாராச்சி அவர்களை நேரில் சென்று கலந்துரையாடி உள்ளதாகவும் அப்போது கௌரவ அமைச்சர் அவர்கள் வடமாகாணத்தினுடைய வைத்தியர்கள் பற்றாகுறை நிரந்தரமாக நீக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அவ் உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக புதிதாக 1௦7 வைத்தியர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை நியாயப்படுத்தியதோடு அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து துறைகளுடைய ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் நகரங்களை அண்டியே அமைக்கபட்டுள்ளது. என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அனைத்து குடிமக்களும் 25km க்குள் தங்களது அனைத்து சுகாதார தேவைகளையும் பெற்றுகொள்ள வேண்டுமென தேசிய கொள்கை இருப்பதனை சுட்டிக்காட்டியதோடு, இது சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் இக்கொள்கைக்கு அமைய அமைக்கப்படவில்லை என்பதனால் அனைத்து விண்ணப்பங்களும் தன்னால் நிராகரிக்கபட்டு விட்டது என்பதையும் தெரிவித்தார்.

மேலும், சுகாதார துறை அதிகாரிகளுக்கு கூகுள் இடவரைபின் இன் உதவியோடு ஆரம்ப சுகாதார நிலையங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதையும், மேற்கூறிய தேசிய கொள்கைக்கு அமைய இன் நிலையங்கள் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களுக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் சுகாதாரம் மற்றும் கல்வி இரண்டு விடயங்களும் அனைத்து மக்களுக்கும் தேசிய கொள்கையின் அடிப்படையிலே 2௦21 ம் ஆண்டு கிடைக்கும் என்பதை உறுதியளித்தார். மாகாண சபைக்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நிதியினூடாக 5 மாவட்டங்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக அதி உச்ச பயன்கள் பெறப்படுவதற்காக இந்த மாகாண சபை செயற்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட செயலகத்தில் உள்ள திட்டமிடல் செயலகங்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை ஆய்வு செய்யாமல், சரியான யதார்த்த ரீதியில் அவற்றை நுணுக்கமாக ஆராயாமல் மக்களுக்கு தேவையான திட்டங்களா என பாராமல் வெறுமனே அனுமதிக்காக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டாம் என தெரிவித்தார். அத்துடன் வடமாகாணத்தில் 54 கட்டடங்கள் பாவனை இல்லாமை இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் இனி தேவையற்ற இடங்களில் கட்டடங்கள் மேலும் கட்டப்படக்கூடாது என்பதனை திட்டமிடல் செயலகங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். அத்துடன், பாடசாலைகளில் ஆடம்பரமான விடயங்களை தவிர்த்து அத்தியாவசியமான வசதிகளான குடிநீர் மற்றும் மலசல கூடம் அமைப்பதையும் வைத்தியசாலைகளில் குடிநீர், மலசலகூட மற்றும் சமையலறை வசதிகளை அமைப்பதை உறுதி செய்யும் முகமாக இந்த 2௦21 இன் திட்டங்கள் அமைய வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.

மேலும், இக்கலந்துரையாடலில் விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, வீதி அபிவிருத்தி வீட்டுத்திட்ட நடவடிக்கைகள், விவசாயிகளின் நிலப்பிரச்சனை, வட்டுவாகல் பாலம் கட்டுதல், குளங்களின் புனர் நிர்மாணம், விளையாட்டு மைதானம் அமைத்தல், காணி உரிமம் தொடர்பான பிரச்சனை, உயிலங்குளம் குளக்கட்டு திருத்த வேலை, புதிய பஸ் தரிப்பிட 2ம் கட்ட வேலைகள், கொவிட் -19 நிலைமை கல்வி சுகாதாரம் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இத் திட்டங்கள், பிரச்சனைகள் பற்றி கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் NSDA உட்பட்ட அனைத்து வீட்டுத்திட்டங்களிலும் கட்டிக் கையளிக்கப்பட்டு மக்கள் சென்று வசிக்காத வீடுகளை அடையாளப்படுத்தி அவ் வீட்டின் உரிமைகளை நீக்கி 2009 ற்கு முன் இடம்பெயர்ந்து வீடுகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமையளித்து வீடுகளை வழங்குமாறு உத்தரவிட்டார்

அத்துடன் விவசாயத் துறை பற்றி கருத்து தெரிவிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆறுகள் ஓடுகின்ற பொழுதும் ஏன் 7000 ஹெக்டேர் வயல் நிலங்கள் மழையை நம்பி விவசாயத்தை மேற்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பினார், அத்துடன் இவ் ஆற்று நீரை சேமித்து இவ் 7000 ஹெக்டேர் வயல் நிலங்களையும் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் பெரும் போகம் மட்டும் அல்லாது சிறு போக விவசாயத்தையும் மேற்கொள்ள வழி ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். அத்துடன் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு திணைக்களத்தினரிடம் இவ் 20 ஆறுகளையும் அடையாளப்படுத்தி ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Free Poker Online Games You Need to Try - Pokerlistings

மேலும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய குளங்களை தெரிவு செய்யும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கௌரவ ஆளுநருடனும் கலந்துரையாடி முடிவுகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

அடுத்ததாக மாவட்ட விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான காணி தொடர்பான பிரச்சனை ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் நில பயன்பாட்டு திட்டமிடலாளர் மற்றும் நில அளவையாளர் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிலம் தொடர்பான திட்டம் ஒன்றை உருவாக்குமாறும், விளையாட்டு வளாகம் நகரத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு அதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

அடுத்ததாக பாலங்கள் புனரமைப்பு மற்றும் கட்டுமானம் பற்றிய விடயத்தில் கொக்கிளாய் பாலம் கட்டுவதற்காக பண ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், வட்டுவாகல் பாலம் கட்டுவதற்கான பண விடயம் பற்றி இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் மற்றும் வட்டுவாகல் பாலம் வடிவமைக்கும் பொழுது படகுகள் சென்று வருவதற்கான இட வசதியையும் கருத்திற் கொள்ளுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் பொழுது ஒரு மைதானத்தை அருகில் உள்ள 2 அல்லது 3 பாடசாலைகள் பயன்படுத்தி பயன் பெறும் வண்ணம் வடிவமைக்குமாறு கூறினார்.

முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள், மகாவலி அபிவிருத்தி திட்ட அதிகாரிகளிடம் இருந்து விவசாய காணிகளில் பயிர் செய்வதற்கு அனுமதியை பெற்று விவசாயிகளை பயிர் செய்ய அனுப்புமாறு பிரதேச செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக வன வள துறையினரின் சில செயற்பாடுகளை பிரதேச மக்கள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர் அப்போது அனைத்து எல்லைக்கல் போடும் செயற்பாடுகளையும் நிறுத்துமாறும், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 2௦21 ற்கு முன் பிரதேச செயலாளரின் பொறுப்பில் இருந்த அனைத்து காணிகளையும் மீண்டும் மாவட்ட செயலகத்திற்கு கையளிக்குமாறும் வன வள துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

மேலும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய மீன்பிடி பற்றிய பிரச்சனை ஆராயப்பட்டது, அதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், அமைச்சர், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுடன் கலந்துரையாடி சில முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் கடந்த நாட்களில் இந்திய மீனவர்கள் அத்து மீறியதற்காக கைது செய்யப்பட்டதை ஞாபகப்படுத்தினார், மேலும் மஞ்சள், தங்கம், கஞ்சா கடத்தல்களை எவ்வாறு தடுக்கலாம் எனவும் கலந்துரையாடப்பட்டது, அத்துடன் மீனவர்களும் கடற்படையினரும் ஒன்றாக இணைந்து ஒரு புரிந்துணர்வுடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சட்ட விரோத மதுபான உற்பத்திகள் மற்றும் பாவனையை தடுத்து நிறுத்துமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இறுதியாக சிங்கள பிரதேச ஆசிரியர் பற்றாக்குறை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது இதன் போது பயிற்சிக்காக சென்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்தல், மற்றும் தேசிய ரீதியில் விண்ணப்பங்களை கோரி ஆளணி பிரச்சனையை நீக்குதல் போன்ற ஆலோசனைகளை கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கினார்.