மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உள்ளக அரங்கில் கடந்த 19.05.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண விளையாட்டுத திணைக்களத்தின் மாகாண ஜூடோ  போட்டி நடைபெற்றது.
வடமாகாண விளையாட்டுத் திணைக்கள விளையாட்டு உத்தியோகத்தர்களுடன் அன்று காலை 9.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகி மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது. போட்டியில் பங்குபற்றிய வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்களில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்ககங்கள் மற்றம் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் முல்லைத்தீவு மாவட்ட அணி 05 தங்கம்,03 வெள்ளி மற்றும் 03 வெண்கலமப் பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும், வவுனியா மாவட்ட அணி 01 தங்கம், 02 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் 01 வெள்ளி மற்றும் 01 வெண்கலமப் பதக்கங்கள்பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். மன்னார் மாவட்ட அணி 01 வெள்ளிப்பதக்கம் பெற்றுக் கொண்டது.
மாகாண மட்டத்தில் பெண்கள் அணி சார்பில் முல்லைத்தீவு மாவட்ட அணி 05 தங்கம்,04 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணி 01 தங்கம்,03 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2ம் இடத்தையும் வவுனியா மாவட்ட அணி 01 தங்கம், மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற போட்டியாளர்களும் எதிர்வரும் 08.06.2024 ஆம் திகதி மற்றும் 09.06.2024 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டியில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்க கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா ஜூடோ  போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

🎡 Jumba Bet Casino Review UK - Slots & Other Games to Play