மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்

Web Banner9

ஆணையாளர் 

திரு .பொ.குகநாதன்
ஆணையாளர்
காணி நிர்வாகத் திணைக்களம்
இல.59, கோவில் வீதி, யாழ்ப்பாணம்.
தொ.பே: 021 321 5539
கை.தொ.பே: 0777466350
தொ.ந: 021 2220836
மின்னஞ்சல்:
landdeptnp@gmail.com

பணி நோக்கு

வடமாகாணத்தின்  நிலைபேறான சுற்றாடல் மற்றும் அரசின் காணிப்பாவணைக் கொள்கையின் அலகுக்கேற்ப அரச காணியின் முறையான பகிர்ந்தளிப்பும் அபிவிருத்தியும். 

குறிக்கோள்கள்

1.எதிர்காலச் சந்ததிக்கும் அபிவிருத்திக்குமாக வடமாகாணத்தில் எல்லைக்குட்பட்ட அரச காணிகள் பாதுகாப்பு.

2.காணித்துண்டுகளின் நிலைபேறான உற்பத்தியை ஊக்குவித்தல்.

3.குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தப்பட்டோருக்கான சமூக பொருளாதார நிலையை உயர்த்துதல் .

4.குடும்ப உறுப்பினர்களிடையே யான உரிமை மாற்றத்தினை உறுதிப்படுத்தல்.

5.அனுமதிக்கப்பட்ட உபபிரிவிடல் விஸ்தீரணத்துக்கு குறைவாக பிரிவிடல் வைத்திருப்பதை உறுதிப்படுத்தல்.

6.தரமான சேவை வழங்கலுக்கான தகமையினை அபிவிருத்தி செய்தல். 

பிரதான செயற்பாடுகள்

 • காணிக்கச்சேரி மூலம் அரச காணிகளை பகிர்ந்தளித்தல்.

 • அனுமதிப்பத்திரம், அளிப்பு வழங்குதலை ஒருங்கிணைத்தல்.

 • காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம், அளிப்புக்களை இரத்துச் செய்ய ஒருங்கிணைத்தல்.

 • அனுமதிப்பத்திரம், அளிப்புக்களை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான சட்டபூர்வமான அடுத்துரிமை வாரிசுகளுக்கு அடுத்துரிமை செய்தல்.

 • விஷேட பகிர்ந்தளிப்பு, மீள் பகிர்ந்தளிப்புக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டப் பிரிவு 20 ‘அ’ இன் கீழ் அனுமதி வழங்குதல். 

 • அரச காணியில் அத்துமீறி ஆட்சி செய்பவர்களை வெளியேற்ற ஒருங்கிணைத்தல்.

 • காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட காணித் துண்டுகளுக்கு உணவு உற்பத்திக் கிணறு அமைக்க மானியம் வழங்குதல்.

 • குடியேற்றத் திட்ட வீதிகளை புனரமைத்தல்.

 • குடியேற்றத் திட்டத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நடுகைப்பொருட்கள், பழமரக் கன்றுகள் விநியோகித்தல்.

 • பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்படும் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.

 • வட மாகாணத்தின் காணி வேலைகளில் ஈடுபட்டுள்ள குழாமினருக்கு பயிற்சிப் பட்டறை, கருத்தரங்கு நடாத்துதல்.

 • அரச காணிச் சட்டத்தின் கீழ் கையுதிர்க்கும் அரச காணிகளுக்கு சிபார்சு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.

 • பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளின் அரசுக்குச் செலுத்த வேண்டிய குத்தகைப்பணம் மற்றும் ஏனைய அறவீடுகளை அறவீடு செய்ய ஒருங்கிணைத்தல்.

 • அரசகாணி தொடர்பான தகவல் மற்றும் முகாமைத்துவ முறையினை ஒருங்கிணைத்தல். 

தொடா்புகளுக்கு

முகவாி: இல.59, கோவில் வீதி, நல்லூா், யாழ்ப்பாணம்.

தொ.பே.இல.: 021-221 1104

தொலைநகல் இல. : 021-222 0836

மின்னஞ்சல்: landdeptnp@gmail.com

பதவிபெயா்நேரடி இல.கை.தொ.இலமின்னஞ்சல்
காணி ஆணையாளா் திரு.பொ.குகநாதன்021-3215539077-7466350landdeptnp@gmail.com

உதவிக் காணி 

ஆணையாளா்

திரு.க.மகேஸ்வரன்021-2211104071-8192351landdeptnp@gmail.com
கணக்காளா்திருமதி.கெ.பாா்த்தீபன்021-2211077071-8457312landdeptnp@gmail.com
நிா்வாக உத்தியோகத்தா்திருமதி.ஆா்.இராமகிருஸ்ணன்021-2220836078-3597421landdeptnp@gmail.com