வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை (04.12.2024) புறப்படும் நிலையில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.