மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபா நன்கொடை

Motorcycle Gambling Games to Add to Your Ride

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின்  நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய  உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம்  600  மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களினால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

100% up to $1,500 2000 Games - MGM Casino Bonus Review for 2023