வடமாகாண மகளிர் விவகார அமைச்சானது மகளிர் விவகாரங்களுக்கான சேவை வழங்கல் பரப்புக்கள் மற்றும் திட்டமிடல் நுட்பங்கள் என்பனவற்றை முக்கியமான சமூகவியல் அம்சங்களாகக் கருதுவதனால், வடமாகாணத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு ஆகியவற்றில் உள்ள ,டைவெளிகளை அறிந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்கவும் பெண்களை வலுவூட்டுதல், பெண்களின் குரல் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காகவும் வடமாகாணத்தில் இந்த நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளுர் தடைகளை அடையாளம் காணுவதற்காகவும் பெண்களுக்கான சேவையை மேம்படுத்தி செயல்திட்டங்களை உருவாக்குவதனையும் நோக்கமாகக் கொண்டு, நல்லூர் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 2024.12.19 ஆம் திகதியன்று பேராசிரியர்(திருமதி) சிவாணி சண்முகதாஸ், பணிப்பாளர்- பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்களை வளவாளராகக் கொண்டு ஒரு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்தியது.
அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் நெறிப்படுத்தலில் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் என 40 பங்குபற்றுனர்களைக் கொண்டு குறித்த பயிற்சிப்பட்டறையானது நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
,ந் நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் தேசிய மற்றும் உள்ளுர் பாலின சமத்துவ சூழலைப் பற்றி புரிந்து கொள்வதுடன்; அந்தந்த பிராந்தியங்களில் உள்ள ,டைவெளிகளை நிவர்த்தி செய்யத் தயாராக ,ருப்பதோடு உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பற்றிய அறிவைப் பெற்று உள்ளுர் சூழலுக்கு அவற்றின் பொருத்தப்பாட்டை புரிந்து கொள்வார்கள் எனவும் பெண்கள் வலுவூட்டல், பங்கேற்பு மற்றும் குரல் கொடுப்பதை ஊக்குவிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்குத் தடையாக ,ருக்கும் சவால்களை அங்கீகரிப்பார்கள் எனவும் பட்டறையின் போது விவாதிக்கப்பட்ட உத்திகளில் ஒன்றைச் செயல்படுத்துவதற்கு தனிப்பட்ட அர்ப்பணிப்பை மேற்கொள்வார்கள் என்றும் வரும் வாரங்களில் தாம் எடுக்கத் திட்டமிடும் முதல் படியை அவர்கள் கோடிட்டு காட்டுவார்கள் எனவும் குறிக்கோள்கள் வகுக்கப்பட்டு குறித்த பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.