புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 05 ஏப்பிரல் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு