பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 21 ஒக்ரொபர் 2019 அன்று முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

லண்டனுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் , அதற்கு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உதவ வேண்டுமென்றும் ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.