யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் வீட்டுத்திட்டத்தின் கீழ், வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, இன்று (11.03.2022) யாழ்ப்பாணத்தில் 15 பயனாளிகளுக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பயனாளிகளுக்கும் அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அமைச்சிற்கும் பயனாளிகளுக்குமிடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.