விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம்

மாகாண விவசாயத் திணைக்களத்தால் உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொடித் தோடைச் செய்கைக்கான 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகள் விநியோக நிகழ்வு 12.05.2020 அன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் திரு.க.பத்மநாதன் அவர்கள் தனது உரையில் விவசாய உற்பத்திக்கொள்வனவு ஒப்பந்தத்துடன் நவீனமுறையில் கொடித்தோடை பயிர்ச்செய்கையினை மேம்படுத்துவதோடு விவசாயிகள் சங்கமாக செயற்படல் வேண்டும் எனவும், வியாபார ரீதியில் விரிவுபடுத்துவதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனவும் விளக்கிக் கூறினார். இந் நிகழ்வில் 2200 “ஹொரண கோல்ட்” வர்க்க கொடித்தோடைக் கன்றுகள் மற்றும் கொடித்தோடை செய்கையின் கீழ் ஊடுபயிராகப் பயிரிடுவதற்காக 600கி.கி. பாசிப்பயறு மற்றும் 200கி.கி. நிலக்கடலை விநியோகிக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் மேலும் இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், காகீல்ஸ் நிறுவன விவசாய அலுவலர், பிரதேச விவசாயிகள் மற்றும் பயனாளிகள்; கலந்து கொண்டனர்.