நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Best MGM Casino Apps Ranked (and Their NJ Partner)

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் 17 பெப்பிரவரி 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் ரூ 5.3 மில்லியன் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் ந.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் த.அகிலன், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்இ நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.